அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகிய பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வு இன்று (08.10.2024) கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பாரத் அருள்சாமி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நேற்றையதினம் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
நாட்டினை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை என அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.