வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று தாக்கல் செய்தது.
Related Posts
எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர்விடுதலைக்கூட்டணி உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்றுகாலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.
வன்னிமாவட்டத்தில் குறித்த கூட்டணியானது சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் அவர்களை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேடதேவையுடைய பெண்ஒருவரும் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.