களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி செல்ல இருந்த புகையிரதத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில், புறப்பட தயாராக இருந்த புகையிரதத்தின் இயந்திரம் உள்ள பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் கடலோரப் பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.