சாந்தனின் பூதவுடல் எதிர்வரும் திங்கட்கிழமை (04.03.2024) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட போதிலும் தற்போது சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்தார்.
சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.