சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழட்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 36 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையட்டும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 .2 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்று வெட்டி ஈட்டியது. இலங்கை அணி சார்பில் சரித ஹசலங்க அதிக பட்சமாக 62 ஓட்டங்களை பெற்றார். மஹீஸ் தீக்ஷண ஆட்ட நாயனாக தேர்வானார்.