யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

0

யாழ். நீர்வேலி பகுதியில் பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுதேர்தல் முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பாக குறித்த பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட சிலர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒரு பெண்ணும், 2 ஆண்களும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி முச்சக்கரவண்டி ஒன்றில் வருகைதந்த அடையாளம் தெரியாத சிலரே தாக்குதலை மேற்கொண்டதாக மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.