அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய 6 பேர் வாகனங்களுடன் கைது

0

அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் 06.05.2024 வரையான 24 மணி நேரத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் சுற்றி வளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மணல் மற்றும் வாகனங்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.