எண் கணிதத்தின்படி 4,13,22,31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் நேர்மறையான பிரதிபலப்பாக விளங்குகிறார்கள்.
இவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
அத்துடன் இவர்கள் சீர்திருத்தவாதிகள் மற்றும் புரட்சிகரமான சிந்தனையுடையவர்கள்.
பொதுவான குணங்கள்
இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்று பாராட்டும் மனப்பான்மை கொண்டவர்கள். அத்துடன் இராஜதந்திரம் இவர்களிடம் கிடையவே கிடையாது.
சில தவறான அணுகுமுறைகளின் காரணமாக எதிரிகளை உருவாக்கிக் கொள்வார்கள். இவர்கள் நியாயமானவர்களாகவும் வெளிப்படையானவர்களாகவும் இருப்பார்கள்.
திகதி வாரியாக…
04ஆம் திகதி – வலிமையானவர்களாகவும் தைரியமானவர்களாகவும் இருப்பார்கள்.
13ஆம் திகதி – இவர்கள் சிறு வயதிலிருந்தே வாழ்க்கையின் பல சூழ்நிலைகளை கடந்து மீண்டு எழுந்தவர்களாக இருப்பார்கள்.
22ஆம் திகதி – புத்திசாலி மற்றும் எளிமையானவர்களாக இருப்பார்கள்.
31ஆம் திகதி – எண்ணங்கள் மற்றும் செயல்களில் அசாதாரணமானவர்களாக இருப்பார்கள்.
தொழில் – இவர்கள் ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் அரசியல் துறைகளிலும் நன்றாக மிளிரக் கூடியவர்களாக இருப்பார்கள்.
திருமணம் – எண் 8 இல் பிறந்தவர்களுக்கு இவர்களுடனான திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். மேலும் எண் 6 இன் கீழ் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமண வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், வெளிர் நீலம் போன்றவை அதிர்ஷ்டமான நிறங்களாக இருக்கும். கறுப்பு நிறத்தை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.