குவைத் தீ விபத்து – 45 இந்தியர்களின் உடல்களுடன் புறப்பட்டது விமானம்:

0

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்ததோடு, 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இவ் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை குவைத் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த 49பேரில் 45 பேர் இந்தியர்கள் என மரபணு பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது.

எனவே அந்த உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான பணிகளை தீவிரப்படுத்தினர் குவைத் அதிகாரிகள்.

உயிரிழந்த இந்தியர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்தத் தீ விபத்தில் 7 தமிழர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்காக இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் நேற்று குவைத் புறப்பட்டு சென்றுள்ளது.

குறித்த விமானம் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு கொச்சிக்கு புறப்பட்டுள்ளது.

கொச்சி விமான நிலையத்திலிருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.