பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இவர்களின் போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளதுடன் 50 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், போராட்டக்காரர்கள் பிரிவி தொலைக்காட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு தீ வைத்தனர். இந்நிலையில், பங்களாதேஷின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதனால் சிறைச்சாலையில் இருந்த 100இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.