ஜனாதிபதி தேர்தலில் அனுரவை இலக்கு வைத்து சஜித் பிரேமதாச அணியும் ரணில் விக்ரமசிங்க அணியும் பிரசாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இணக்கபாட்டுடைய பிரசார நடைமுறையின் மூலம் இரு அணிகளும் சாதகமான வெற்றியை நோக்கி நகர்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாச இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் இருவருக்கும் சாதகமான பிற்கால அரசியல் நகர்வையே வகுக்கும் என கூறப்படுகிறது.